LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 29, 2019

‘ஒரு பேய் இல்ல இரண்டு பேய்’ – தேவி 2 திரைப்படத்தின் டீசர்

நடிகர் பிரபுதேவா மற்றும்  தமன்னா நடித்துள்ள ‘தேவி 2’ திரைப்படத்தின் டீசர்  வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், இத்திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை தமன்னா பிரபுதேவாவுடன் இணைந்து கடந்த 2016ஆம் ஆண்டு ‘தேவி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தாயாராகியுள்ளது. பிரபுதேவாவின் தயாரிப்பில் முதல் பாகத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

சாம் சி.எஸ் இசையில், மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில், அந்தோனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, ஜெகன், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7