இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர் உடனடியாக இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று முதல் இரு தரப்பிற்கும் இடையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்று வருகின்றது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் பிரிவில் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் அந்நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கின்றது. இது தீவிர ஆபத்தின் அடையாளம் என இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தரப்பின் இழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை. எனினும் கடந்த 4 நாட்களில் இந்திய இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






