கடலூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பிரசாரத்துக்காக 300 இருசக்கர வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்ப தி.மு.க.வினர் துண்டுச்சீட்டு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோல் நிரப்ப வந்த 165 பேரின் துண்டுச்சீட்டுக்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






