ஒன்றாரியோவிலுள்ள 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் நாளைய தினம்(புதன்கிழமை) இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம், மாதாந்தம் குறைந்த வருமானம்பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலவசக் கல்வித்திட்டத்தை நீக்கியது.
இதன்காரணமாக மாதாந்தம் குறைந்த வருமானம்பெறும் பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றாரியோவிலுள்ள 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் நாளைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.






