அல்பேர்ட்டா முதல்வர் ரேச்சல் நோட்லே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ம் திகதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.கல்கரியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சிகளை கடுமையாகச் சாடி தனது உரையை ஆற்றினார்.
அத்தோடு அங்கு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த முதல்வர், அவர்கள் எழுப்பிய காரசாரமான கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





