ஒன்ராறியோவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு, ஒன்ராறியோவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலுள்ள சுமார் 160,000 மாணவர்களிடையே முன்னெக்கப்பட்டுள்ளது.
இதில், 63 சதவீத மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் அனுபவித்திருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர்களிடம் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டதில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.






