இது குறித்து தகவல் தருபவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்த விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பிரிவு பொலிஸாரிடமுள்ள வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றித் தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. அறிவிப்பை வெளியிட்டுள்ளது






