சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் ஈழ தமிழர்கள் வாழவுரிமைக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், விடுதலைச் சிறுத்தைககள் கட்சியின் தலைவர் தொள் திருமாவளவன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் போர்க்குற்றம் புரிந்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய மத்திய அரசு ஐ.நா சபையில் வலியுறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை, பொலிஸார் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைது செய்துள்ளனர்.






