LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

சிம்பாப்வெ அனர்த்தம்: பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு தேவைகள் பூர்த்தி

‘இடாய்’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சிம்பாப்வெ ஜனாதிபதி எம்மர்சன் (Emmerson Mnangwagwa) தெரிவித்துள்ளார்.

இடாய் எனபெயரிடப்பட்டுள்ள சூறாவளி கடந்த வியாழக்கிழமை இரவு மொசாம்பிக் குடியரசை தாக்கிய நிலையில் அதனை தொடர்ந்து சிம்பாப்வெயை நோக்கி ஊடுருவியது. இதனால் சிம்பாப்வெயில் கிழக்கு சிமனிமணி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலைமை ஓரளவு சீரடைந்துள்ள நிலையில் அப்பகுதியை பார்வையிட சென்ற ஜனாதிபதி எம்மர்சன் இதனை தெரிவித்துள்ளார்.

தெற்கு ஆபிரிக்க பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அனர்த்தம் இதுவென ஐக்கிய நாடுகளால் குறிப்படப்பட்டுள்ள நிலையில் சீன உட்பட பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன.

சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆபிரிக்க பகுதியில் 2.6 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதோடு பாரியளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.இந்நிலையில் இவ்வனர்த்தத்துக்கு உடனடியாக 3.97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மொசாம்பிக், சிம்பாப்வெ மற்றும் மலாவி ஆகிய பகுதிகளைத் தாக்கிய இடாய் சூறாவளியினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7