LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

737 மக்ஸ்-இன் மென்பொருள் மேம்பாடு அவசியம்: போயிங் நிறுவனம்

இரு போயிங் 737 மக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த விமானத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கும் மென்பொருளை மேம்படுத்துமாறு போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

‘விமானத்தில் கோளாறு ஏற்படும்போது, புதிய பாதுகாப்பு எச்சரிக்கை அம்சம் விபத்துக்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும். முன்னதாக அந்தப் பாதுகாப்பு அம்சம் அவசியமற்ற ஒன்றாக இருந்தது. தற்போது இந்த மென்பொருள் மேம்படுத்தல் அத்தியாவசியமாகியுள்ளது.

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய லயன் எயார் விமானத்திலும் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானத்திலும்  மேம்படுத்தப்பட்ட எச்சரிக்கை மென்பொருள் இல்லை. இது தொடர்பில் விமான சேவைகளும் கேட்கவில்லை’ என போயிங் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை 737 ரக விமானங்களின் மென்பொருள் மேம்பாடு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7