கனடாவின் சில பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எட்மன்டன், ஒட்டாவா உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு கடும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் ஐந்து முதல் பத்து சென்ரிமீற்றர் வரை பனிப்பொழிவு நிலவக்கூடும் என கனேடிய காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மக்கள், அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





