தமது பயணிகள் போயிங் விமானத்தின் மீதான நம்பிக்கையை இழந்திருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எயார்லைன்ஸ் கருடாவின் பேச்சாளர் இக்ஷான் ரொஷான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 50 போயிங் 737 மக்ஸ்-8 விமானங்கள், 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. அதில் ஒன்றே கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் மேலதிகமாக கோரப்பட்ட விமான முன்பதிவுகள் ரத்து செய்யப்படுகிறது.
அடுத்தடுத்து இடம்பெற்ற விமான விபத்துக்களால் பாதுகாப்பு நோக்கம் கருதி போயிங் விமான சேவைகள் உலகளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.
இதேவேளை விமான ரத்து தொடர்பான போயிங் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் எதிர்வரும் 28 ஆம் திகதி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






