கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக நடிகரான உதயநிதி ஸ்டாலின் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தேர்தல் பறக்கும்படை அலுவலர் முகிலன் அளித்த முறைப்பாட்டின் பேரில் கள்ளக்குறிச்சி பொலிஸார் 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில் கடந்த 23 ஆம் திகதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.





