LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

ஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபோர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபோர் மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதன்போது இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த இந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

இதன்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7