டெல்லியில் இன்றிரவு 46 பா.ஜ.க. வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.பி.நட்டா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்தார். எனினும், இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் மத்திய அமைச்சருமான உமா பாரதி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. மத்திய தேர்தல் ஆலோசனைக் குழு கூட்டத்திலும் அக்கட்சியின் தலைமையிடம் தனது கருத்தை உமா பாரதி வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, உமா பாரதியை கட்சியின் தேசிய துணைத் தலைவராக அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






