குறித்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை பொலிஸ் அதிகாரி மற்றும் உட்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச காணொளி எடுத்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வாக்குமூலமாக பதிவு செய்துகொண்டனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யும் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






