கண் இல்லையேல் பார்க்க முடியாது, அறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.”
பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்குள்ளாவர்| கேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர்.”
இறுமாப்பு, அனைத்தும் தெரிந்த போக்கு, எல்லாம் எனக்குத் தெரியும், நான் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்ற சிந்தனைப்போக்கு நமது செருக்கை வெளிக்காட்டுகின்றது. செருக்கு ஒருவனின் வீழு;ச்சிக்கு வழி கோலும் என்பது நிச்சயம். சரியானதை, உண்மையானதை, நீதியானதை அறிந்திருந்தும் தம் போக்குத் தவறு என்று கண்டு கொண்டாலும் விட்டுக் கொடுக்காது அதிலேயே பிடிவாதமாக இருப்பது அவரவர் அழிவுக்கே வழி சமைக்கும். அடுத்தவருக்கு தீமை நினைப்பவன், சரியானதை மாற்றியமைத்து தன் போக்கிற்கு அனைத்தையும், அனைவரையும் தவறாக திசை திருப்புவன் அழிவையே சந்திப்பான்.
பதின் மூன்றாம் நிலை
மரியின் மடியில் உயிர் பிரிந்த இயேசு .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“சிறைப்பட்டவர்களின் புலம்பலைக் கேட்கவும், சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், உன்னதங்களிலுள்ள தம் திருத்தலத்தினின்று ஆண்டவர் தம் பார்வையைத் திருப்பினார்.”
(சங். 101: 19, 20)
இடி தாங்கிப் பழகிய உள்ளம் அடி தாங்க அழுவதில்லை. ஆனாலும் மடி தாங்கிய மகனின் சாவு, வெடி தாங்கிய பாறையாக அன்னை உள்ளத்தைச் சிதறடிப்பது இடிக்கும் மேலான சாட்டை சொடுக்கப்பட்டதன் அடையாளம்.
சாவுக்கென குறிக்கப்பட்டிருந்தார், கொடியவர் கைச் சிறைப்பட்டிருந்தார்;| அதன் வேதனையையும், சோதனையையும் அவர் அறிவார்.
வேண்டும் நமக்கு விடுதலை! ஆனால் எதினின்று விடுதலை? எப்படியான விடுதலை? இதில்தான் கருத்து மோதல், எதிர்பார்ப்பிலே மோதல்!
இறைவன் வகுக்கும் விடுதலை என்ன? நாம் குறிக்கும் விடுதலை என்ன? நம் பேதமைகளிலிருந்தும், மூட நம்பிக்கை, அளவுக்கு மீறிய உலக நாட்டங்களிலிருந்தும் வேண்டும் நமக்கு விடுதலை!
இறைவன் சொல்லும் விடுதலைக்கு நாம் உரியவராக வேண்டுமென்றால், நாம் அவரிடம் முற்றாகச் சரணடைந்துவிட வேண்டும். அங்கேதான் செத்துப் போகும் மனங்களுக்குக் கூட ஆறுதல் கிட்டுகிறது.
தன்னையே இறைவனிடம் வழங்கிவிட்ட இயேசுவுக்கு அன்னையின் மடியே அங்கு பெரும் ஆறுதல்.
சிந்திப்போம்:
சிறைப்பட்டோர், சாகடிக்கப்பட்டோர், விலாசமின்றிப் போய்விட்டோர் கதற வைத்துச் சென்ற உள்ளங்ளுக்கு ஆறுதல் தர எனக்கு வாய்ப்பளித்த இயேசுவே உமக்கு நன்றி!
மூடப்பழக்க வழக்கம், மூட நம்பிக்கை, அறியாமை, இயலாமைகளினின்றும் என்னை விடுவித்துத் தலை நிமிர்ந்து வாழ எனக்கு வரம் ஈந்த இறiவா நன்றி!
தீங்குகள் என்று மட்டுமல்ல, என் வாழ்வில் முழுவதையும் உம் கையில் ஒப்படைத்து, எதையும் எதிர் நோக்கும் மனத்துணிவை எனக்குத் தந்த இறiவா உமக்கு என் நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
