இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை| ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது.
நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்| ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.”
‘துள்ளுகின்ற மாடு பொதி சுமக்கும்’ என்பது ஆன்றோர் வாக்கு! அந்தச் சுமையின் அழுத்தம் பாடாய்ப் படுத்தும். விட்;டுக் கொடுப்பதால் யாரும் கெட்டுப் போவதில்லை| மாறாக மனமும் வாழ்வும் தளர்ச்சியோடு சுகமாக முன்செல்ல அது வழி செய்யும். நமக்கு நாமே தேடிக் கொள்ளும் தீங்குகள் நம்மாலேயே களையப்பட வேண்டுமேயல்லாது வேறொருவால் அதை நமக்குச் செய்து தர முடியாது. இயேசு நம் பாவத்திற்காகத் தன்னையே கழுவாக, பிராயச்சித்தமாக சிலுவையில் பலியாக்கிய பின்னும் பாவங்கள் மண்ணில் பெருகவே செய்கின்றன. இயேசுவாக வாழ வேண்டிய தலைவர்களாலேயே பாவம் மண்ணில் வளர்க்கப்படகின்றது. அந்தப் பாவங்கள் அவர்களாலே கழுவப்பட வேண்டுமேயல்லாது இயேசு மீண்டும் ஒரு முறை பிறந்து வந்து சாக முடியாது! அடையாளங்களையும், அனுமானங்களயும் நம் வாழ்வின் போக்கில் மட்டும் அவதானித்துக் கொள்ளலாம் என்றில்லை| அடுத்தவர் வாழ்வைக் கொண்டும் நம்மால் அனுமானித்துக் கொள்ள முடியும்.
பதின் நான்காம் நிலை
இயேசு கல்லறையில் அடக்கமாகிறார் .. ..
திவ்விய யேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர சுவாமி.
“தரையினுள்; துஞ்சுவோர் யாவரும் அவரை மட்டுமே ஆராதிப்பர், கல்லறைக்குச் செல்கிற யாவரும் அவர் முன் தலை வணங்குவர்.”
(சங். 21: 29)
கல்லறைகளின் பசிக்குச் சவங்கள்தான் தீனி! உள்ளமெனும் கல்லறையில் எத்தனை விதமான பிணங்கள்தான் நாளும் சங்கமமாகின்றன?
பார்வைக்கு வெள்ளை தீட்டியிருந்தாலும், கல்லறைக்குள் எல்லாமே எலும்பும், நாற்றமும்தான். இயேசுவை வைத்தது கல்லறையிலல்ல. அது அவருக்கு ஒரு ஓய்வறை! அதைப் புரியாத பரிசேயருக்குத்தான் அது வழமையானதொரு கல்லறை!
கள்ளின் நிறமுந்தான் வெள்ளை! அதற்காக அதையே பால் என்று யாரும் அடம்பிடிப்பதில்லை.
தோற்றங்கள் என்றும் மயக்கம் தரும்| உண்மைகளும் அதனால் தடைப்பட்டுப் போகும்.
உள்ளத்தின் வெளிச்சம் மங்காதவரை, உண்மையின் வலிமை தோற்பதில்லை.
விசுவாசம் என்கிற வெளிச்சத்தில் கல்லறை நமக்கும் ஓய்வறைதான்.
என் உள்ளம் என்பது என்ன தீங்கான எண்ணம் வாழும் கல்லறையா? இல்லை நன்மைகள் நாள் பார்த்து நிற்கும் ஓய்வறையா?
சிந்திப்போம்:
என் உள்ளத்தைக் கல்லறையாக மாற்றிப் பாவங்கள் புழுவாய்ப் பெருகிடவிடாமல் பாதுகாத்துத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
தோற்றங்களில் நான் மயங்கிடாது, இயல்பிலே மனிதரை, அவர் செயலை மதிப்பிட எனக்கு அருள் தந்த இறiவா உமக்கு நன்றி!
என் உள்ளம் என்பதை, அன்பு பூத்து நின்று, பரிதவிக்கும் உள்ளங்களின் உணர்வுகளுக்கு ஒரு ஓய்வறையாக மாற்றித் தந்த இறiவா உமக்கு என் நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
