
செய்தியாளர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடிய மிக மோசமான சூழ்நிலையை நாம் சந்தித்தோம்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் தூத்துக்குடியில் சிறு தொழில்கள், வியாபாரம் என்பன முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்களும், இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கிராமப்புற மக்களுக்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள்கூட செய்து தரவில்லை. எனவே அங்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
