குறித்த சம்பம் இன்று காலை (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தத்தையும் மீறி குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தெர்பெனி செக்டாரில் நடத்தப்பட்ட இந்த அத்துமீறல் தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலின் போதே இந்திய இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து குறித்த பகுதியில் அவ்வவ்போது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
