அத்துடன் காங்கிரஸ் கட்சியின் பொய்யான செய்திகளைக் கேட்டு கட்சியினர் தவறாக சென்றுவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “காங்கிரஸ் கட்சியுடன் எவ்விதமான கூட்டணியும் இல்லை. ஆகையால் உத்தரப் பிரதேச மாநிலங்களிலுள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளட்டும்.
இந்த தேர்தலில் மாநிலத்தில் பா.ஜ.கவை வெல்வதற்கு சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை ஒன்றிணைந்தாலே போதுமானது. அதனால் காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியும் தேவையில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ராஜ்வாதி பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டியிடும் ஏழு இடங்களில் காங்கரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது என குறித்த மாநிலத்திற்கான காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பார் நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மாயாவதி இவ்வாறு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
