அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை வரை இந்த மீன்பிடி தடை அமுல்படுத்தப்படுகிறது.
திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் சோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக இத்தடை போடப்பட்டுள்ளது.
கச்சத்தீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்துகொள்வதற்காக சுமார் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர்.
திருவிழாவின்போது அந்நியர்களின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






