ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது வெளியிட்ட பிரதமர், “பொரளையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பாக எனது, உத்தரவுக்கமைய எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை. எவரையும் வெளியே விடவும் இல்லை.
பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்த சம்பவமானது, முழு நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.






