மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ
மகா மாரியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேக
விஞ்ஞாபனம் நிகழ்வை முன்னிட்டு இன்று எண்ணெய் மற்றும் பால்க் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமிர்தகழி பகுதியில் பழமை வாய்ந்த ஆலயமாக
விளங்கும் அமிர்தகழி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் புனர்த்தாபனம் செய்யப்பட்டு
ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிகழ்வு
நாளை நடைபெறவுள்ளது
ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிகழ்வை முன்னிட்டு கடந்த 20.03.2019
புதன்கிழமை அதிகாலை தொடக்கம் 22.03.2019 வெள்ளிக்கிழமை
மாலை வரை அமிர்தகழி
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு வேதாகம் உதயசூரியன் சக்கரவர்த்தி சிவாகம சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜன் குருக்கள் தலைமையில் ஆரம்பமான பூர்வாங்க கிரிகைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை
காலை விசேட விநாயகர் வழிபாடுகளுடன் திவ்விய உன்னத 96 திரவியங்களை கொண்டு யாக ,ஹோமம் பூசைகள் இடம்பெற்று
விக்கிரங்களுக்கு எண்ணெய் மற்றும் பால் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது
ஆலய பரிவார
மூர்த்திகள் மற்றும் அம்மனுக்கு பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வானது நாளை காலை சுபவேளையில் பரிவார மூர்த்திகளுக்கும் மற்றும் அம்மனுக்கும் பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வுகள் பிரதிஷ்ட பிரதம குரு அமிர்தகழி
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு வேதாகம் உதயசூரியன் சக்கரவர்த்தி சிவாகம சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜன் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது





