LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 23, 2019

7206 பேருக்கு காணி உறுதிபத்திரங்கள் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது


மட்டக்களப்புக்கு விஜயம் செய்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களும் மற்றும்  காணி அனுமதிப்பத்திரங்களையும்  இன்று வழங்கி வைத்தார்


மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற  காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக ,  இராஜாங்க அமைச்சர்களான எம் எஸ் எஸ் .அமீர் அலி  ,அலி சாகிர் மௌலானா ,, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் சி.யோகேஸ்வரன் உள்ளிட்டோரும்  கலந்துகொண்டனர்

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் ஏற்பாட்டில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில்   நடைபெற்ற இந்த  வைபவத்தில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளை  சேர்ந்த மக்களுக்கு  காணி உறுதிப்பத்திரங்களும்  காணி அனுமதிப்பத்திரங்களும்  வழங்கப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக அரச காணியில் வாழ்ந்த வாழ்ந்த மக்களுக்கு நிரந்தரமான காணி வழங்கும் வகையில்  6109 காணி அனுமதிப்பத்திரங்களும்  1097 காணி உறுதிப்பத்திரங்களும்  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது

 இதன்போது வாகரை பிரதேச செயலக பிரிவில் 326  காணி அனுமதி பத்திரங்களும் ,221காணி உறுதி பத்திரங்களும் ,

கோரளைப்பற்று மத்தி பிரிவில்  91  ,காணி உறுதி பத்திரங்களும்

,கோரளைப்பற்று வாளைச்சேனை பிரிவில் 26  ,காணி உறுதி பத்திரங்களும்,
கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 26  ,காணி உறுதி பத்திரங்களும், 

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில்  4 காணி அனுமதி பத்திரங்களும்   23 காணி உறுதி பத்திரங்களும்  ,

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில்  1  காணி அனுமதி பத்திரமும்  ,2  காணி உறுதி பத்திரங்களும் ,

கோரளைப்பற்று கிரான் பிரதேச செயலக பிரிவில்    1085 காணி அனுமதி பத்திரங்களும்   233  காணி உறுதி பத்திரங்களும்  ,ஏறாவூர் பற்று

செங்கலடி பிரதேச செயலக பிரிவில்  737    காணி அனுமதி பத்திரமும்  ,40   காணி உறுதி பத்திரங்களும் ,மண்முனை பற்று

ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில்    15 காணி அனுமதி பத்திரங்களும்   3  காணி உறுதி பத்திரங்களும்  மண்முனை , தென்

எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில்   151  காணி அனுமதி பத்திரங்களும்   32   காணி உறுதி பத்திரங்களும்  ,

போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில்  பிரிவில்     672  காணி அனுமதி பத்திரங்களும்  282   காணி உறுதி பத்திரங்களும் ,

மண்முனை தென் மேற்கு  பிரதேச செயலக பிரிவில்  பிரிவில்     180   காணி அனுமதி பத்திரங்களும்  64    காணி உறுதி பத்திரங்களும்
மண்முனை மேற்கு  வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்  பிரிவில்     2938   காணி அனுமதி பத்திரங்களும்  54    காணி உறுதி பத்திரங்களும் , மொத்தமாக  6107   காணி அனுமதி பத்திரங்களும்  1097    காணி உறுதி பத்திரங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இந்த காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும்  காணி அனுமதிப்பத்திரங்கள்  வழங்கும் நிகழ்வில்  காணி  அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு , மாநகர சபை முதல்வர் ,, நகர சபை தவிசாளர்கள்  , நகரசபை  சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை தலைவர்கள்; ,உறுப்பினர்கள்  அரச திணைக்கள அதிகாரிகள் , மதத்தலைவர்கள் , பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்








 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7