இந்த விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,கைத்தொழில்,வர்த்தகம்,நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்ற,கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி,திறன் அபிவிருத்தி அமைச்சருமான றிஸாட் பதியுதீன் கலந்து கொள்கின்றார்.
விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறு;ப்பினர்களான தயாஸ்ரீ ஜயசேகர,டக்ளஸ் தேவானந்தா,பாலித தேவப்பெரும, ஸ்ரீயானி விஜய விக்கிரம,எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருடன் அம்பாறை மாவட்டச் செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மேலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன்அலி,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோரும்,அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள்,பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விருது விழாவில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனதின் உறுப்பினர்கள் 18 பேரும்,அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள ஊடகவியலாளர்கள் 30பேரும்.சமூக சேவைக்காக 4 பேருமாக 52 பேர் பொன்னாடை போர்த்தி,மாலை.பதக்கம் என்பன அணிவித்து விருதும்.சாண்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
பி.எம்.எம்.ஏ.காதர்
