சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இவ்விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கோவா முதலமைச்சரான மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்ததையடுத்து, புதிய முதல்வராக பிரமோத் சவாந்த் நேற்று முன் தினம் நள்ளிரவு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியை நள்ளிரவு நடத்தியதற்கு பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா விமர்சித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அக்கட்சி குறிப்பிடுகையில், “கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் சர்தேசாயும், சுதின் தவாலிகரும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து, தங்களுக்கு உரிய பதவியை பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில்தான் பா.ஜ.க.வினர் அவசரமாக பதவியேற்றுக்கொண்டனர்.
கோவாவில் வெறும் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியில் 2 பேருக்கு துணை முதல்வர் பதவி அளித்துள்ளது வெட்கக்கேடானதாகும்” என மேலும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.






