தொழிற்பேட்டை ஒன்றில் அமைந்துள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் அந்த கட்டிடத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது.
பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், மிகவும் தீவிர தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சுமார் 30 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






