குறித்த சம்பவத்தில் குறித்த கட்டடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், கடைகளின் ஊழியர்கள், மேலும் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கட்டட விபத்து: உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு
கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் பகுதியில் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
கட்டுமான பணி இடம்பெற்றுவரும் குறித்த கட்டடம் நேற்று முன்தினம் இடிந்து வீழ்ந்தது. இதில் இருவர் உயிரிழந்ததோடு, பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டனர். இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) மேலும் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் மீட்டுள்ளதோடு, இதுவரை 40 பேர் வரை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாமென தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.






