சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரசாரத்தினை மேற்கொள்ளவுள்ளேன்.
அந்தவகையில் நாளை தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறேன்.
இந்தியா முழுவதும் மோடிக்கு எதிர்ப்பலை தோன்றியுள்ளதைப்போல தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு எதிர்ப்பலை வீசுகிறது.
எனவே தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்” என வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.






