நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாரதிய ஜனதாவை வீழ்த்த நான் பிரசாரம் செய்ய இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் எனக்கு பிரதமராகும் கனவு இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை.
நானும் பிரதமர் பதவிக்கு தெரிந்து எடுக்கப்பட்டால் உத்தரப்பிரதேசத்தில் வெற்றிடமாக இருக்கும் எந்தத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.
இதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்காக தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்” என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.






