திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பா.ஜ.க.தலைமையிலான மத்திய அரசை அகற்றுவதில் பொதுமக்கள் எங்களைவிட அதிக ஆர்வமாக இருக்கின்றனர். நிச்சயம் எதிர்வரும் தேர்தலில் மக்கள் அதனை நிறைவேற்றியே தீருவார்கள்.
எங்களது நோக்கமெல்லாம் மத்தியில் நடக்கும் பாசிச ஆட்சி மற்றும் மாநிலத்தில் நடக்கும் எடுபிடி ஆட்சியை இல்லாமற் செய்வதே ஆகும்.
மக்கள் இவ்விடயத்தில் உறுதியாக இருக்கின்றனர். இது எதிர்வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.
எனவே மக்களது ஆதரவுடன் நாம் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று இந்த பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






