
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று (சனிக்கிழமை) சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிரதமர் மோடி மீது தனிப்பட்ட விரோதமோ, கோபமோ எனக்கில்லை. கடந்த காலங்களில் 4go back modi போராட்டம் இடம்பெற்றது. ஆனால் இனி dont enter modi என போராடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களவை தேர்தல் பரப்புரைக்காக மார்ச் மாதம் 6ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
