இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அக்கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
