தனக்கு நடிகை சமந்தா மற்றும் ஜோதிகாதான் முன்னுதாரணம் என நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.திருமணத்துக்குப் பின்னரும் சாயிஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையிலேயே நடிகை சாயிஷா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொடர்ந்து திரையுலகில் நீடிப்பது குறித்து முடிவெடுப்பதற்கான முழு உரிமையையும் தனக்கு ஆர்யா அளித்திருக்கிறார் என்று சாயிஷா கூறியுள்ளார்.
பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தியான சாயிஷா ‘வனமகன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியிருந்தார்.
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’ என தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு ஆர்யாவுடன் காதல் மலர்ந்தது. இது குறித்து இவரது குடும்பத்தாருக்கு விவரம் தெரிய வந்ததும், இவர்களது திருமணத்தை உடனே நடத்தி முடித்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.





