‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்படத்தை இயக்கிய ஜான்பால் ராஜன் மற்றும் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.
இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் மற்றும் மது ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயஸ் இசையமைப்பில் இம்மாதம் 22ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் ராஜேஷ் குமார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட, அரசியல் த்ரில்லர் கதையாகும். இதில் பாபி சிம்ஹா பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சதீஷ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும், மதுபாலா வில்லி வேடத்திலும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்வை பெற்ற நிலையில், தற்போது இதன் இரண்டாவது டிரெய்லரிலும் பரபரப்பான காட்சி வசனங்கள் என மிரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது






