LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 20, 2019

நடுவீதியில் மாடு பிடித்த நியுயோர்க் பொலிஸார்!

நாட்டிலோ, வீதியிலோ எந்த சம்பவம் நடந்தாலும் அது இறுதியில் பொலிஸாரின் தலையில்தான் வந்து விழும். நம் நாட்டில் கட்டாக்காலியாக திரியும் கால்நடைகள் வழமையாக பாதையை மறித்துக் கொண்டுதான் செல்லும்.

ஆனால் அமெரிக்காவின் முக்கிய நகரான நியுயோர்க்கில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருப்பது அபூர்வம்தான். ஆனால் அதற்கான பொலிஸார் மேற்கொண்ட பிரயத்தனம்தான் மிக வேடிக்கையாக இருக்கின்றது.

எங்கிருந்தோ தப்பி வந்த பசுவொன்று மேஜர் டீகன் நெடுஞ்சாலையின் மத்தியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குழப்பம் விளைவித்துள்ளது. அதனை பிடித்து வீதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்குள் நியுயோர்க் பொலிஸாருக்கு போதும் என்றாகிவிட்டது.

கன்றுக் குட்டி என கருதப்படும் குறித்த விலங்கு வாகன நெரிசலில் மிரண்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்தி தரையில் வீழ்த்திய பொலிஸார் கும்பலாக சேர்ந்து பொலிஸ் பாரவூர்தியொன்றில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக குறித்த நெடுஞ்சாலையில் சுமார் 1 மணித்தியாலம் வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கன்றுக் குட்டி நியு ஜெஸ்ஸியில் உள்ள ஸ்கைலேன்ட் விலங்குகள் பராமரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7