ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னதாக ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்திலிருந்து ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு தங்க நிறத்திலான குறித்த தீபம் சகுரா அல்லது செர்ரி மலரின் பின்னணியை கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் மிகுந்த ஆரவாரத்துடன் இடம்பெற்று வருகின்றது.
இருந்த போதும் இந்த முறை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தங்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் உள்ளீடுகளோடு வடிவமைக்கப்பட்டது.
இந்த ஒலிப்பிக் தீபத்தின் வடிவத்தில் தாம் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த Tokujin Yoshioka தெரிவித்துள்ளார். ஐந்து சகுரா இதழ்களும், அதன் தலைப்பகுதியில் ஐந்து ஒலிம்பிக் வலயங்களை பிரதிபலிக்கின்றன.
ஃபுகுஷிமாவில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலைக்கு சென்ற போது அங்கு மாணவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த வடிவத்தை தாம் தயாரித்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த ஒலிம்பிக் தீபம் முழுமையாக 1.2 கிலோகிராம் எடையிலான அலுமியத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






