எனினும், நடுவழியில் இறங்கும் விமானங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாதுகாப்பு கருதி பாங்காக், கோலாலம்பூர், டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்துவரும் விமானங்கள் தற்போதைக்கு அனுமதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒருமாத இடைவெளிக்கு பின்னர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா ஆகிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லவும் அனுமதியளிக்கப்பட்டது.
காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு அவசரமாக மூடியது.
இதேபோல் சில நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும், உள்நாட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன.
கடந்த 27ஆம் திகதியில் இருந்து சில நகரங்களின் வான் எல்லை வழியாக வெளிநாட்டு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில முக்கிய விமான நிலையங்கள் ஊடாக மிக குறைவான விமானச் சேவைகள் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
