திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் உள்ள நாட்டு வெடிகள் தயாரிக்கும் கட்டடத்தில் இன்று (புதன்கிழமை) காலை பணியாளர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதன்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
