
இவர் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இராணுவ தளவாட கொள்முதலில் இடைத்தரகராக செயற்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அவர் மீது முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட டுபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கொடுத்த தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர், சூசென் மோகன் குப்தா முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்குகளை விசாரிக்கும் தனிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
