லண்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் (Madame Tussauds London) அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோனின் மெழுகு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையை தீபிகா படுகோனே திறந்து வைத்துள்ளார். அச்சு அசலாக தன்னைப் போலவே இருந்த மெழுகு சிலையைப் பார்த்து தீபிகா மட்டுமல்ல அவருடைய கணவர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகாவின் பெற்றோர் அனைவருமே ஆச்சரியமடைந்தனர்.
இதில் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங், “இந்த சிலையை நான் வீட்டிற்கு கொண்டு செல்லலாமா என்று கேட்க, அதற்கு தீபிகா எப்பொழுதெல்லாம் இங்கே படப்பிடிப்பிற்கு வருகின்றீர்களோ அப்போது என்னை நீங்கள் தவறவிடுவதாக நினைத்தால், இங்கே வந்து இந்த சிலையை பார்த்துக் கொள்ளுங்கள்” என தீபிகா கூறினார்.





