நியூசிலாந்தில் இருவேறு பள்ளிவாசல்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களுக்கு மிசிசாகுகாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த 15ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் உயிரிழந்த 49 பேரையும் நினைவு கூர்ந்து மிசிசாகுகாவில் 500ற்கும் மேற்பட்ட மக்கள் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு வந்த மக்கள் குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு தமது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர்.





