
உள்ளுார் நேரப்படி நேற்று(வியாழக்கிழமை) இரவு இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் உணவகத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவரையும், குழந்தையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இதன்போது மீட்கப்பட்ட பெண்ணும், குழந்தையும் காயங்களின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கடும் போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படாத நிலையில், இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
