இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமான தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் வாகா எல்லைக்கு சென்ற பொதுமக்கள் பலர் அபிநந்தனின் விடுதலை இரு நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்திற்கான வெளிப்பாடு என தெரிவித்துள்ளனர்.
மேலும் நீண்டகாலமாக இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல்களை தணிக்கும் செயற்பாடாக இரு அமைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பாகிஸ்தானின் இந்த செயற்பாட்டிற்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





