கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ராஜூ பாஸ்கரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு அரசியல்வாதிகள் இனவாதம் பேசியே மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு விடயத்தினைப் பேசுபொருளாக்கி தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
உதாரணமாக யுத்தகாலத்தில் யுத்தம் தொடர்பான விடயங்களையும் அதன் பின்னர் அழிவுகள் தொடர்பாகவுமே பேசி வருகின்றனர்.அவர்கள் அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக எதுவுமே கதைப்பதில்லை.
தொடர்ந்தும் இனவாதம் பேசிக்கொண்டிருந்தால்தான் அடுத்துவரும் தேர்தலில் மக்களது வாக்குகளைப் பெறலாம் என்பதால் இந்த தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
இந்த சிலைகள் உடைப்பு விவகாரத்திலும் குறித்த அரசியல்வாதிகள் இனவாதத்தினையே கையில் எடுத்திருக்கின்றனர். பௌத்தர்கள் வாழாத இடத்தில் விகாரைகள் எதற்கு என கோஷமிட்டு வருகின்றனர்.
இது மக்களை ஏமாற்றும் செயல்.மக்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என ராஜூ பாஸ்கரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
