சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.
நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
