LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 20, 2019

தவக்கால சிந்தனைகள்

“எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்| தருமம் செய்தல் செய்த பாவங்களைக் கழுவிப் போக்கும்.
நன்மை செய்தோருக்கே நன்மை செய்பவர்கள் தமது எதிர் காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்| தங்களது வீழ்ச்சிக் காலத்தில் அவர்கள் உதவி பெறுவர்.”
வெயில் காலத்தில் வெட்கையைத் தணிக்க குளிரான இடத்தையோஇ தொண்டைக்கு இதமான குளிர் பானங்களையோ மனிதர் தேடுவது வழமை. நாம் தெரிந்து தெரிந்து செருக்குடன் செய்யும் தவறுகள் நம் தலை மீது நாமே அள்ளிப் போடும் தணலைப்போன்று நம்மை எரித்துப் போடுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால் மனிதன் தவறுகள் செய்ய மாட்டான். செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டபிறகும் அதை நியாயப்படுத்திக் கொண்டு அதைத் தொடருபவனை மனிதன் என்கின்ற வகுப்புக்குள் அடக்கிக் கொள்ள முடியாது. ‘தருமம் தலை காக்கும்’ என்ற ஆன்றோர் வாக்கில் அர்த்தம் பலவுண்டு. ஆனாலும் தருமம் பண்ணுகின்றபோது நாம் என்ன நோக்கத்தோடு அதைப் பண்ணுகின்றோமோஇ அது அந்த நோக்கத்தை நம் வாழ் நாளிலேயே அனுபவிக்கச் செய்யும். மாறாகப் பலன் எதிர்பாராது அடுத்தவன் வாழ வழி செய்வதையே நோக்கமாகக் கொண்டு எதிர்பார்ப்பின்றி செய்யும் தருமம்இ நமக்கு மட்டுமல்ல நம் தலைமுறைக்குமே காவலாய் நிற்கும்.   
சிலுவைப் பாதை தியானம். . . .
தியாகத்தின்  பாதை . . . .!
சிலுவைப் பாதை பாடுகளின் பாதை மட்டுமல்ல
நம் வாழ்வின் பாதையுங் கூட.
மனிதராக நாம் வாழ
சிலுவைப் பாதை எம்மைச்
சிந்திக்கச் செய்கிறது.

அந்தச் சிந்தனை ஒரு தியானமாகி
எமக்குள் ஒரு முறை
நாமே உற்று நோக்கி
தெரிகின்ற குறை நிறைகளைச்
சீர்தூக்கிப் பார்த்து
முழுமையான மனிதராக எமை மாற்ற
சிலுவைப் பாதைச் சம்பவங்கள்
எம்மைத் தூண்டுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டின் முன்னே
நடந்து முடிந்துவிட்ட
வெறும் சம்பவங்கள் இல்லை இவை.

நமது அன்றாட வாழ்வில் எதிரொலிக்கும்
நிகழ்வுகள் இவை.

துன்பப்பட்டவன் வாழ்வு இது.
துன்பப்படுபவன் வாழ்வுக்கு வழியும் இது.

எனவேஇ
சிலுவையின் பாதையில் நாம் நடப்போம்.
சிந்திக்கும் பாதையில் நாம் நடப்போம்.
புறக்கண்களை மட்டுமல்ல
அகக் கண்களையுங் கூட திறந்து நடப்போம்.

முதலாம் நிலை

இயேசு மரணத் தீர்வைக்குள்ளாகிறார்.
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
நீதி தவறிவிட்ட நிலை .. .. இங்கு பிலாத்துக்கள் அதிகரித்துவிட்ட நிலை.. ..
அன்னாசுகளும்இ கைப்பாசுகளும் வென்றுவிட்ட நிலை. .. ..
குற்றவாளிக்கும்இ சுற்றவாளிக்கும் இடையே வேறுபாட்டைக் காண மறுக்கும் கூட்டத்தின் நடுவே நீதி மூச்சுத் திணறி அவதிப்படும் காட்சி!

விடுதலை தரவந்தவன் யார்? .. .. பயங்கரத்தை உருவாக்கியவன் யார் ? புரியவில்லை அந்த மந்தைகளுக்கு.. .. “இயேசு அவர்களுக்கு வேண்டாமாம் .. .. பரபாசே வேண்டுமாம்” .. யாரிடம் சொல்லி அழுவது இந்தப் பரிதாப சீவன்களை?
நீதிக்கும் தம் வாழ்வுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் நீதி வழங்க முற்படலாமா? குற்றமிழைத்தலையே தம் வாழ்வின் வேதமாக அமைத்துக் கொண்டவர்கள் .. .. தப்புக்குச் சூடுபோட நெருப்புக்குள் இரும்பை வைக்கலாமா?
முதுகிலே மூட்டையாய்ப் பாவம் கனத்திருக்கஇ அடுத்தவன் தோளிலே தொங்கும் பைக்குள் தவறுகள் தெரிவதாய்க் கூறலாமா? .. .. யார் யாருக்குத் தீர்ப்பிடுவதென்ற விவஸ்தையே இங்கிருப்பதாய்க் காணோம்... ..
குறைகள் கொண்டதே மனிதம் .. ..தவறுகள் அதிலே சகஜம்.. .. இதை மனதிலே வைத்து மற்றவரைப் பார்த்தால் .. .. தீர்ப்பிடும் பாவத்தைச் செய்யவே மாட்டோம்.
நீதியின் தேவன் இயேசுவிடமே நாம் அந்த உறுதியை வழங்குவோம்:
“ எம் வாழ்வில் மற்றவரைத் தீர்ப்பிடமாட்டோம் இறiவா!”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7