கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது இரு தரப்பிலும் போட்டித்தன்மை காணப்படுகின்றது. ஜனாதிபதி வேட்பாளர் என்று பெயர் குறிப்பிட்டு ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தங்களின் அரசியல் இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக முயற்சி செய்கின்றார்கள். நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயக கோட்பாடுகளையும், கடந்து வந்த சம்பவங்களையும் மறந்து விடுகின்றார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. ஒருவேளை இவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன்.
இந்நிலையில் முக்கிய அரசியல் தீர்வுகளை மேற்கொள்ள நேரிடும். இவ்வருடம் தேர்தல் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் தேர்தல் இடம்பெறுவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலை எந்நேரத்தில் நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை எவராலும் மாற்றியமைக்க முடியாது. அதேபோல் ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. ஆனாலும் அவை சாத்தியமற்றதாகி விடும். நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
