
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இது குறித்து தெரிவித்த அவர், “பொது வேட்பாளரை ஏன் மக்கள் ஜனாதிபதியாக்கினர் என அவருக்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ நினைவு இருக்கின்றதா?
தாம் ஏன் ஆட்சிக்கு வந்தோம். மக்கள் ஏன் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். அவர்களுக்கு எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தோம் என்ற அனைத்தையும் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதேபோல் மாகாணசபைத் தேர்தல் பிற்போகும் என தெரிந்தும் அன்று சபையில் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்தவர்கள் அனைவரும் இன்று தேர்தல் இல்லையென முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
